இங்கே மக்கள் சேவையே பிரதானம்
ஜாதி இல்லை
மதமும் இல்லை
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை
கட்சி பாகுபாடு இல்லை
இவர்கள் தான் சமூகத்தின் நல் அடையாளங்கள் என……!

திருச்சி, சிருங்கனூர் MAM School of Engineering college ல் நடைப்பெற்ற #_இயற்கை_உறவுகள்_விருது_2018_19 விழா குழுவினர் நமது ஊர் #_GREEN_NOVO_GROUPன் நற்பணிகளை அங்கீகரித்து சிறப்பு சேர்க்கும் விதமாக 07-04-2019 ஞாயிறு அன்று….

மறைந்த அப்துல் கலாம் ஐயா அவர்களின் அண்ணன் பேரன் ஜனாப் #APJ_MJ_SHEIK_SALEEM அவர்களின் கரங்களால் நம்மாழ்வார் ஐயா விருது கொடுத்து கவுரவித்தனர்.
எங்கள் குழு சார்பாக நானும்
நண்பன் Mohamed Gazzali
நண்பன் Raja Abdul Kader
மகிழ்வுடன் பெற்றுக் கொண்டோம்.

எல்லா புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும்.

இந்த விருதை அனைத்து விதங்களிலும் எனக்கு ஆதரவளித்து சமூகப்பணியில் ஊக்கப்படுத்திடும் உறவினர்கள், நண்பர்கள், களப்பணியில் கைகொடுக்கும் வாலிபர்கள், என் ஊர் மக்கள், என் முகநூல் உறவுகள் என அனைவர்களுக்கும் உரிதாக்கி மகிழ்கிறேன்.

எங்களை தேர்வு செய்த விழா குழுவினர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவிற்கு வந்து என்னுடன் மிகப்பிரியமுடன் உரையாடி நிழற்படம் எடுத்துக்கொண்ட சகோதரர்களுக்கும் மேலும் என்னைப் போன்று விருதுகள் வாங்கிய அனைவர்களுக்கும் அன்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும்…..

SRC: பரங்கிப்பேட்டை பசுமை ஹாஜி