நாலு குச்சி , நாலு கீற்று , கதவுபோல் தட்டி , பூட்டுகூட இல்லாத நிலை பாம்பு தேள் சாதாரணமாக வந்துபோகும் அளவிற்கு பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் வீடு.

இந்நிலை அறிந்த தர்மம் செய்வோம் குழுவினர் தங்களுக்குள் மாதம் 500 ரூபாய் என்று சிறுக சேமித்து தங்களால் முடிந்த அழகிய வீட்டை கட்டி இன்று ஒப்படைத்துள்ளனர்.

வீடில்லாமல் கஷ்ட்டப்படுபவர்களை பார்க்கும்போது நமக்கும் பாவமாகத்தான் இருக்கும் , ஆனால் வீடுகட்டி தரும் அளவிற்கு நம்மிடம் பணமில்லையே என்று நொந்துகொண்டு வெறுமனே பாவப்பட்டுவிட்டு கடந்துவிடுவோம்

ஆனால் தர்மம் செய்வோம் குழுமத்தினர் இறைவன் அருளால் வெறுமனே பாவப்பட்டு கடந்துபோய்விடாமல் மாதம் மாதம் 500 ரூபாய் உறுப்பினர்களுக்குள் சேர்த்து இவ்வீட்டை இறைவன் அருளால் கட்டி கொடுத்துள்ளனர்

இறைவன் இவர்களின் நற்பணிகளை பொருத்திக்கொள்ள பிரார்த்திப்போம்

சமூக ஒற்றுமையாக

பசுமை ஹாஜி,

ரிச்சர்ட் எட்வின்,

அருள்முருகன் ஆகியோர் இணைந்து வீட்டிற்கான சாவியை பயனாளியிடம் ஒப்படைத்தனர்.

அப்துல்காதர் மதனி அவர்கள்,

தமீம் அன்சாரி அவர்கள்,

மலை நட்ராஜ் அவர்கள்,

கா.மு. கவுஸ் அவர்கள்

ஜெய்னுல்லாபுதீன் அவர்கள்,

ஹாஜி அலி அவர்கள்,

நபீல் நவீத் அவர்கள்

உள்ளிட்ட பலர் இந்த நன்மையான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் .

பிறர் நலன் நாடுவதே இஸ்லாம்

SRC:முத்துராஜா ,Haji Ali